செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மகளிர் பிரிவில் ஜெர்மனியின் கெர்பர்  'சாம்பியன்'!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர்  'சாம்பியன்' பட்டம் வென்றார்.

ஞாயிறு காலை நடைபெற்ற  இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகிய இருவரும் பலப்பரீட்சையில் ஈடுபட்டனர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கெர்பர் 6-3, 4-6, 6-4  என்ற செட் கணக்கில் கரோலினாவைத் தோற்கடித்து 'சாம்பியன்' பட்டம் வென்றார்.

28 வயதான கெர்பர் வெல்லும் இரண்டாவது க்ராண்ட் ஸ்லாம் பட்டமாகும் இது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலும் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்   என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்க வீராங்கனை செரினாவை அந்த இடத்திலிருந்து அகற்றி விட்டு,நாளை  முதல் கெர்பர் உலகின் முதல் நிலை வீராங்கனை ஆகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT